UPDATED : மே 30, 2026 07:52 PM
ADDED : மே 30, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ஹோட்டலுக்குள் லாரி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் இருந்து மங்கலம்பேட்டை புறவழிச்சாலை வழியாக விருத்தாசலம் நோக்கி, மே 29 நள்ளிரவு 12:00 மணியளவில் சிமெண்ட் ஏற்றிய டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது.
கர்னத்தம் சந்திப்பு சாலை அருகே சென்றபோது, டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்ததால், சாலையோரம் இருந்த ஹோட்டலுக்குள் லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. இதில், லாரி டிரைவர் காயங்களின்றி தப்பினார். கடந்த சில தினங்களாக, ஹாட்டல் மூடியிருந்ததால் அதிஷ்ர்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மங்கலம்பேட்டை போலீசார், வழக்குப் பதிந்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
