தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிழங்கு வேர் பூச்சி மேலாண்மை பயிற்சி

கிழங்கு வேர் பூச்சி மேலாண்மை பயிற்சி

கிழங்கு வேர் பூச்சி மேலாண்மை பயிற்சி


ADDED : ஜூன் 02, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 05:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருக்கனுார் பண்ணைத் தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் கிழங்குகளில் வேர் பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் செட்டிப்பட்டில் நடந்தது. 

வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி, மரவள்ளி, மஞ்சள், சிறுவள்ளி கிழங்கு, கருணைக்கிழமை போன்ற கிழங்கு வகைகளில் ஏற்படும் வேர் பூச்சி கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தார். 

தொடர்ந்து, எள் பயிர்களில் மகசூல் அதிகப்படுத்தும் உத்திகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.  

இதில், செட்டிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயசந்திரன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், செயல் விளக்க உதவியாளர் தங்கதுரை மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us