தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பார்ட்டி பண்டு கேட்டு மிரட்டல் த.வெ.க., நிர்வாகி நீக்கம்

பார்ட்டி பண்டு கேட்டு மிரட்டல் த.வெ.க., நிர்வாகி நீக்கம்

பார்ட்டி பண்டு கேட்டு மிரட்டல் த.வெ.க., நிர்வாகி நீக்கம்


ADDED : ஜூன் 27, 2026 07:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 07:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காட்டுமன்னார்கோவில்: வண்டல் மண் எடுத்த விவசாயிடம், பார்ட்டி பண்டு கேட்டு மிரட்டல் விடுத்த, த.வெ.க., மாவட்ட இணை செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த கருணாகரநல்லுாரை சேர்ந்த நடேசன் மகன் புலவேந்திரன் 45; த.வெ.க., கடலுார் மாவட்ட இணை செயலாளர். இவர் தற்போது பெரியார் நகர் சாலக்கரை ரோட்டில் வசித்து வருகிறார். கடந்த, 25ம் தேதி காட்டுமன்னார்கோவில் அடுத்த கண்டமங்கலம் நாரைக்கால் ஏரியில் வருவாய்த்துறையில் அனுமதி பெற்று, வண்டல் மண் எடுத்த விவசாயிடம், ஒரு லட்சம் ரூபாய் பார்ட்டி பண்டு கேட்டு மிரட்டினார்.

இதனால் கண்டமங்கலம் பொதுமக்கள், புலவேந்திரன் காரை வழிமறித்து முற்றுகையிட்டனர். மேலும் அவரது கார் கண்ணாடியை உடைத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும் புலவேந்திரன் மீது த.வெ.க., கட்சி தலைமைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கட்சி தலைமையின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தும், முதல்வர் விஜய் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட த.வெ.க., மாவட்ட இணை செயலாளர் புலவேந்திரனை, ஒழுங்கு நடவடிக்கை குழு ஒப்புதலோடு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என த.வெ.க., மாவட்ட செயலாளர் சீனுவாசன் தெரிவித்துள்ளார்.

நீண்டகால சர்ச்சை

சலுான் கடை நடத்தி வந்த புலவேந்திரன், முன்னரே கட்சியில் பதவி பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார் என்ற புகார் எழுந்தது. இதனை கட்சி தலைமையில் உள்ள கடலுாரை் சேர்ந்த நிர்வாகி கட்சி தலைமையிடம் தெரிவிக்காமல் மறைத்து வந்ததால், புலவேந்திரன் பதவியில் நீடித்து வந்தார். மேலும் அவர் கட்சி தலைமையில் உள்ள கடலுாரை சேர்ந்த நண்பர் துணிச்சலில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பல்வேறு பிரச்சனைகளில் ஈடுபட்டு வந்தார் என கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.  



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us