ADDED : மார் 04, 2025 09:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : எதிரிகளிடம் இருந்து தப்பிக்க கத்தியுடன் சுற்றி திரிந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகிக்கும் வகையில் சுற்றித் திரிந்த இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அதில், பெரியார் நகர் கவுதம்,25; உருளையன்பேட்டை அரவிந்த் (எ) சின்ன அரவிந்த், 23; என்பதும், இருவர் மீதும் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
அவர்களை சோதனை செய்ததில், இருவரும் கத்தி வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர் விசாரைணயில், எதிராளிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கத்தியுடன் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து கத்திகளை பறிமுதல் செய்தனர்.