/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவமனையில் திருடிய இருவர் கைது
/
மருத்துவமனையில் திருடிய இருவர் கைது
ADDED : செப் 04, 2024 07:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தனியார் மருத்துவமனையில் ரூ. 24 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் குழாய் டேப்பை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
அரியூரில் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கழிவறை மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்ட 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குடிநீர் குழயாய் டேப்பை திருடிச் சென்ற சிவராந்தாகத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, 27; செல்வகுமார், 32, ஆகியோரை மருத்துவமனை செக்யூரிட்டி பிடித்து வில்லியனுார் போலீசில் ஒப்படைத்தனர்.
பாதுகாப்பு அதிகாரி கலியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.