/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா விற்பனை ஒடிசாவை சேர்ந்த இருவர் கைது
/
கஞ்சா விற்பனை ஒடிசாவை சேர்ந்த இருவர் கைது
ADDED : மார் 23, 2024 06:20 AM
புதுச்சேரி : மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், சப்இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை திடீர் சோதனையில் ஈடுப்பட் டனர்.
அப்போது, பைக்கில் நின்றிருந்த இருவரை மடக்கி பிடித்து விசாரித்தபோது, ஒடிசா மாநிலம் சகாதாஹரிபூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் மாலிக், 19; ஜெகதீஷ்சிங்பூர் பகுதியைச் சேர்ந்த கவுதம், 40; ஆகியோர் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இருவரும் மேட்டுப்பாளையம் பகுதியில் தங்கிக் தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டு, ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரிடம் இருந்து 175 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

