/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர் மாளிகை அருகே வீச்சரிவாளுடன் இருவர் கைது
/
கவர்னர் மாளிகை அருகே வீச்சரிவாளுடன் இருவர் கைது
ADDED : ஜூலை 31, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கவர்னர் மாளிகை அருகே வீச்சரிவாளுடன் சுற்றிய தமிழக வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி கவர்னர் மாளிகை அருகே ரோமண்ட் ரோலண்ட் வீதியில் நேற்று முன்தினம் மதியம் இரு வாலிபர்கள் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்தது.
பெரியக்கடை போலீசார் அங்கு சென்று இரு வாலிபர்களை பிடித்தனர். விசாரணையில், காஞ்சிபுரம், ஆலந்துார், வா.உ.சி., நகரைச் சேர்ந்த பிேரம்நாத், 22; சென்னை பூந்தமல்லி, ஜேம்ஸ் வீதியைச் சேர்ந்த தப்ரேஷ், 23; எனத்தெரியவந்தது.
இருவரையும் பெரியக்கடை போலீசார் கைது செய்து 2 கத்திகளைபறிமுதல் செய்தனர்.