/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருநாள் அவசர சிகிச்சை பயிற்சி
/
காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருநாள் அவசர சிகிச்சை பயிற்சி
காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருநாள் அவசர சிகிச்சை பயிற்சி
காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருநாள் அவசர சிகிச்சை பயிற்சி
ADDED : ஆக 08, 2024 01:54 AM

புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த இரு நாள் அவரச சிகிச்சை பயிற்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காஞ்சி மாமுனிவர் அரசு முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அலெர்ட் என்.ஜி.ஓ., உடன் இணைந்து, 'இருநாள் அவசர சிகிச்சை பயிற்சி' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்தது. நிகழ்ச்சியை, கல்லுாரி இயக்குனர் செல்வராஜ், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
கல்லுாரி முதல்வர் மனநாதன், துணை முதல்வர் சையத் சஜித் அலி, பொதுச்செயலாளர் தங்க மணிமாறன், மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சத்தீஷ்குமார், உறுப்பினர் நடேசன், ஆலோசகர் தையல் நாயகி, ரோட்டரி கிளப் நிர்வாகி ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சியாளர் கார்ல்மார்க்ஸ், உயிர் காக்கும் பணியில், மாணவ-மாணவியர், முதலுதவி எவ்வாறு செய்ய வேண்டும் என, விளக்கினார். இப்பயிற்சி, நேற்று நிறைவு பெற்றது.
பயிற்சியில் வணிகவியல், சுற்றுலா, தமிழ், கணிதம், வர்த்தகம், வரலாறு, பொருளாதாரம், கணினி, தாவரவியல், அறிவியல், புள்ளியியல் மற்றும் வேதியியல் துறை மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை, ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் மேரி ஜோசபின் அருணா, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார், ஆராய்ச்சியாளர் கவுசல்யா, மாணவி ரோஷ்னி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிறைவாக ஆராய்ச்சியாளர் கவுசல்யா நன்றி கூறினார்.