தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொலைமுயற்சி வழக்கில் இருவருக்கு ‘குண்டாஸ்’

கொலைமுயற்சி வழக்கில் இருவருக்கு ‘குண்டாஸ்’

கொலைமுயற்சி வழக்கில் இருவருக்கு ‘குண்டாஸ்’


ADDED : மே 28, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: நெய்வேலியில் கொலைமுயற்சி வழக்கில் கைதான, 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன் சி.ஆர்., காலனியை சேர்ந்தவர் தியாகராஜ். அப்பகுதியிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின்போது சாமி ஊர்வலத்தில் சிலர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது தியாகராஜன், அந்த நபர்களை கண்டித்து அனுப்பினார். இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 4ம் தேதி, தியாகராஜனுக்கு சொந்தமான பேட்டரி கடையில் ஆயுதங்களுடன் புகுந்த, 3 பேர் கும்பல், தியாகராஜனை தலை மற்றும் கையில் வெட்டியது.

புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார வழக்கு பதிந்து, செடுத்தான்குப்பத்தைச் சேர்ந்த சிவநாதன் மகன் முத்துக்குமார்,33; சி.ஆர்.காலனியை சேர்ந்த செல்லத்துரை மகன் கட்டையன் (எ) தர்மசீலன்,32; ஞானம் மகன் கார்த்திக் (எ) குமரவேல்,27; ஆகியோரை கைது செய்தனர்.

கட்டையன் (எ) தர்மசீலன் மீது கொலை முயற்சி, திருட்டு, ஆயுதம் வைத்திருத்தல் உட்பட மொத்தம் 15 வழக்குகளும், முத்துக்குமார் மீது கொலைமுயற்சி, அடிதடி என 5 வழக்குகள் உள்ளன.

இவர்களது குற்றச்செயலை தடுக்கும் பொருட்டு, கடலுார் மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்மசீலன், முத்துக்குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகல் போலீசார் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us