/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெயிண்டர் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது
/
பெயிண்டர் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது
ADDED : ஏப் 09, 2024 04:46 AM

புதுச்சேரி: கள்ள காதல் விவகாரத்தில் பெயிண்டர் கொலை செய்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி சாரத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (எ) ஜெயபாஸ்கர்,48; பெயிண்டர். இவர் கடந்த 5ம் தேதி நெஞ்சுவலியால் இறந்ததாக அவரது மனைவி சர்மிளா தேவகிருபை கோரிமேடு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில், ஷர்மிளா தேவகிருபை வேலை செய்த பேக் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கடலுார் மாவட்டம், சி.என்.பாளையம் அடுத்த பட்டீஸ்வரத்தை சேர்ந்த சேகர்,43; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதனை பாஸ்கர் கண்டித்தார்.
அதனால் ஷர்மிளா தேவகிருபை, கள்ளகாதலன் சேகர் ஆகியோர் தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து பாஸ்கரை ஆட்டோவில் அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, நெஞ்சு வலியால் இறந்ததாக நாடகம் ஆடியது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து ஷர்மிளா தேவகிருபை, கள்ள காதலன் சேகர், ஆட்டோ டிரைவர் மணிகண்டன்,37; ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
மேலும், பாஸ்கரை ஆட்டோவில் ஏற்றி கழுத்தை நெரித்து கொலை செய்த அரியாங்குப்பம், புதுக்குளம் வீதி விமல்,28; முதலியார்பேட்டை உடையார்தோட்டம் ஆனந்த்,29; ஆகிய இருவரை நேற்று போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவர் மீதும் கொலை, அடிதடி வழக்குகள் உள்ளது.

