/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டாஸ்மாக் கடையில் காலாவதியான பீர் குடித்த இருவருக்கு வாந்தி, பேதி
/
டாஸ்மாக் கடையில் காலாவதியான பீர் குடித்த இருவருக்கு வாந்தி, பேதி
டாஸ்மாக் கடையில் காலாவதியான பீர் குடித்த இருவருக்கு வாந்தி, பேதி
டாஸ்மாக் கடையில் காலாவதியான பீர் குடித்த இருவருக்கு வாந்தி, பேதி
ADDED : மே 07, 2024 04:08 AM
மயிலாடுதுறை : சீர்காழி அருகே டாஸ்மாக்கில் வாங்கிய காலாவதியான பீர் குடித்த வாலிபர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அதை அடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா காரைமேடு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்,31, நாங்கூர் மேல தெருவை சேர்ந்தவர் சார்லஸ்,27.
இருவரும் தென்னலக்குடியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் 4 டின் பீர் வாங்கி அருந்தியுள்ளனர்.
அடுத்த சில மணி நேரங்களில் இருவருக்கும் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த சீர்காழி போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் டாஸ்மாக் கடையில் வாங்கிய டின் பீர்கள் கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதியுடன் காலாவதியானது தெரிய வந்தது.
காலாவதியான பீர்களை அருந்தியதால் இருவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சீர்காழி போலீசார் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.