/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உணவில் மயக்க மருந்து கொடுத்து முதியவரிடம் 15 சவரன் நகை திருட்டு இரு பெண்களுக்கு தலா 2 ஆண்டு சிறை
/
உணவில் மயக்க மருந்து கொடுத்து முதியவரிடம் 15 சவரன் நகை திருட்டு இரு பெண்களுக்கு தலா 2 ஆண்டு சிறை
உணவில் மயக்க மருந்து கொடுத்து முதியவரிடம் 15 சவரன் நகை திருட்டு இரு பெண்களுக்கு தலா 2 ஆண்டு சிறை
உணவில் மயக்க மருந்து கொடுத்து முதியவரிடம் 15 சவரன் நகை திருட்டு இரு பெண்களுக்கு தலா 2 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 06, 2024 04:24 AM
புதுச்சேரி: உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, முதியவரிடம் 15 சவரன் நகை திருடிய இரு பெண்களுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
புதுச்சேரி, வாணரப்பேட், ஜெயராம் செட்டியார் தோட்டம், 4வது குறுக்கு வீதியைச் சேர்ந்தவர் வீரமணி, 72: ஓய்வு பெற்ற சுதேசி மில் தொழிலாளி. இவரது மனைவி இறந்து விட்டார். 3 மகள், ஒரு மகன் திருமணம் செய்துகொண்டு வெளியூரில் வசிக்கின்றனர்.
வீரமணி மட்டும் தனியாக வசித்து வருகிறார். வீட்டில் தங்கி வேலை செய்ய பெண் தேவை என நண்பர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 28 ம் தேதி வீட்டிற்கு வந்த 2 பெண்கள், வீட்டு வேலைக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர்.
அப்பெண்கள் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டதும் வீரமணி மயங்கி விழுந்தார். மறுநாள் காலை 7:30 மணிக்கு வீரமணி எழுந்து பார்த்தபோது, அவர் அணிந்திருந்த தங்க மோதிரம், செயின், பீரோவில் இருந்த மனைவியின் நகை என மொத்தம் 15 சவரன் நகை மற்றும் பீரோவில் இருந்த 35 ஆயிரம் பணம், மொபைல்போன் திருடு போயிருந்தது.
புகாரின்பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தில், வீரமணி வீட்டில் திருடியது மதுரையை சேர்ந்த முத்துலட்சுமி, 43; சித்ரா,39; என்பதும், இருவரும் திருவெற்றியூரில் நடந்த திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பது தெரிய வந்தது.
அவர்களை புதுச்சேரி போலீசார் கைது செய்து, திருடிய நகைகளை உருக்கி வைத்திருந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது புதுச்சேரி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் கணேஷ் ஞானசம்பந்தம் ஆஜராகினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன், முதியவரிடம் நகை திருடிய முத்துலட்சுமி, சித்ரா ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.