sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உல்லாஸ் திட்ட விழிப்புணர்வு: பொம்மலாட்ட வாகன பிரசாரம்

உல்லாஸ் திட்ட விழிப்புணர்வு: பொம்மலாட்ட வாகன பிரசாரம்

உல்லாஸ் திட்ட விழிப்புணர்வு: பொம்மலாட்ட வாகன பிரசாரம்


ADDED : மார் 03, 2025 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2025 05:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தை 100 சதவீதம் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்றும் பொருட்டு, மாநில எழுத்தறிவு மையம் சார்பில், உல்லாஸ் திட்டம் துவங்கப்பட்டு1,200 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.

அவர்களுக்கான 'அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வு' வரும் 23ம் தேதி நடக்கிறது.

இந்நிலையில், உல்லாஸ் திட்டம் மற்றும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வு குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இரண்டு நாள் 'உல்லாஸ் விழிப்புணர்வு பொம்மலாட்ட' வாகன பிரசாரம் நடந்தது.

விழிப்புணர்வு வாகனத்தை உல்லாஸ் திட்ட நோடல் அலுவலர் சுகுணா சுகிர்தபாய் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிராஜா, பயிற்சி மைய விரிவுரையாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில், தோற்பாவை கூத்து கலைஞர் கலைமாமணி அமுதன் பொம்மலாட்ட குழுவின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.

வரும் 23ம் தேதி நடக்கும், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ள 15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதவர்கள், அருகிலுள்ள அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி, இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us