/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதுநிலை, டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு
/
முதுநிலை, டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு
முதுநிலை, டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு
முதுநிலை, டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு
ADDED : ஏப் 29, 2024 04:08 AM
புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழக முதுநிலை,டிப்ளமோ படிப்புகளுக்கு கியூட் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு கியூட் நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றது.
அதன்படி, கியூட் நுழைவு தேர்வு எழுதி வெற்றிப் பெற்ற மாணவர்கள், மாணவர் சேர்க்கைக்காக, வரும் 30ம் தேதிக்குள் புதுச்சேரி பல்கலைக்கழக இணையதளத்தில் யூ.ஜி., டிகிரி, பத்தாம் வகுப்பு,பிளஸ்2,பிறந்த நாள் சான்றிதழ்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி கியூட் தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் நுழைந்து மாணவர் சேர்க்கை படிவத்தை ஆன்லைன் பூர்த்தி செய்ய இணையத்தில் தேடி வருகின்றனர்.
ஆனால் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான படிவம் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக விரைவில் மாணவர் சேர்க்கைக்கான போர்ட்டல் திறக்கப்படும் என்ற அறிவிப்பு மட்டுமே ் பளீச்சிடுகிறது.
நேற்றுமுழுவதும் இணையதளம் முன் தவம் கிடந்த மாணவர்கள் விரக்தியடைந்தனர்.
ஆன்-லைனில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை 30 ம்தேதி கடைசி தேதி என பல்கலைக்கழகம் அறிவித்துள்ள சூழ்நிலையில் மாணவ, மாணவிகள் கலக்கமடைந்துள்ளனர்.
பல்கலைக்கழக இணையதளத்தில் மாணவர் சேர்க்கைக்கு பதிவு செய்ய கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

