/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலக முத்துமாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
/
உலக முத்துமாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED : மார் 23, 2024 06:21 AM

புதுச்சேரி : உலக முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி, பாரதி வீதியில் பழமைவாய்ந்த உலக முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலையில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் உலக முத்துமாரியம்மன் உற்சவர் ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஆளவந்தார், செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் ரவி(எ)சண்முகசாமி, கோவில் அர்ச்சகர் ஹரிகரன் குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

