sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.250 கோடி மத்திய அமைச்சர் உறுதி

/

சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.250 கோடி மத்திய அமைச்சர் உறுதி

சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.250 கோடி மத்திய அமைச்சர் உறுதி

சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.250 கோடி மத்திய அமைச்சர் உறுதி


ADDED : செப் 13, 2024 06:33 AM

Google News

ADDED : செப் 13, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சிக்கான மெகா கட்டமைப்பை ஏற்படுத்த ரூ.250 கோடி நிதி அளிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

பெங்களூருவில் தேசிய அளவிலான சுற்றுலா அமைச்சர்கள் மாநாடு கடந்த வாரம் நடந்தது. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இணை அமைச்சர் சுரேஷ்கோபி மற்றும் அனைத்து மாநில சுற்றுலாத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில், சுதேஷ் தர்சன் 2 திட்டத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு தலா ரூ.80 கோடி கேட்டு ஏற்கனவே அனுப்பிய முன்மொழிவை ஏற்று உடன் நிதி வழங்க வலியுறுத்தினே். கோவில்களை சுற்றி வணிக வளாகம் மற்றும் விடுதிகள் கட்ட நிதி கோரியுள்ளேன்.

மத்திய அமைச்சர் பேசுகையில், 'சுற்றுலா வளர்ச்சிக்காக மாநில அரசுகள் ரூ.250 கோடிக்கு 2 மெகா திட்ட வரையறை அனுப்பினால், நிதி வழங்க தயாராக உள்ளதாக கூறினார். அந்த நிதியை கொண்டு புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சிக்கு மிகப் பெரிய கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து , மத்திய அரசு நியமித்துள்ள 3 ஆலோசகர்களிடம் ஆசோதித்து, திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்ப உள்ளோம்.

மேலும், யோகா திருவிழா, கடற்கரை திருவிழா போன்று மக்கள் அதிகம் கூடும் வகையில் சுற்றுலா திருவிழா நடத்த ரூ.80 லட்சம் நிதி வழங்குவதாக கூறியுள்ளார். சுற்றுலா திருவிழாவுடன், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கார்னி வெல், மாகேவில் மகோத்சவ், ஏனாமில் மக்கள் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம்.

புதுச்சேரிக்கு பயணிகள் கப்பல் வருவதற்காக, பழைய துறைமுக பாலத்தை இடித்துவிட்டு 300 மீட்டர் துாரத்திற்கு புதிதாக துறைமுக பாலம் கட்ட துறைமுகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. காரைக்காலில் ஸ்மார்ட் துறைமுக திட்டத்தை ரூ.120 கோடியில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது' என்றார்.






      Dinamalar
      Follow us