/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சான்றிதழ் சரிபார்ப்பு இணைய வசதி மீண்டும் கொண்டு வர வலியுறுத்தல்
/
சான்றிதழ் சரிபார்ப்பு இணைய வசதி மீண்டும் கொண்டு வர வலியுறுத்தல்
சான்றிதழ் சரிபார்ப்பு இணைய வசதி மீண்டும் கொண்டு வர வலியுறுத்தல்
சான்றிதழ் சரிபார்ப்பு இணைய வசதி மீண்டும் கொண்டு வர வலியுறுத்தல்
ADDED : மே 29, 2024 05:22 AM

புதுச்சேரி : ஒருங்கிணைந்த சான்றிதழ் சரிபார்ப்பு இணைய வசதியை அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஆண்டுதோறும் உயர்கல்வி சேர்க்கைக்காக வருவாய்த் துறையின் மூலம் 25 ஆயிரம் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அதிக சான்றிதழ்கள் சென்டாக் உயர்கல்வி சேர்க்கைக்காக சமர்ப்பிக்கப்படுகிறது.
இது குறித்து மீண்டும் வருவாய்த் துறை ஆய்வுக்கு செல்வதால், மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏற்படுகிறது. இது குறித்து சட்டசபையில் அனைத்து எம்.எல்.ஏ.களும்., உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சாதி, குடியிருப்பு, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெருவதற்கு அரசு இணைய வசதி ஏற்படுத்த வலியுறுத்தினர்.
அதன்படி, சென்டாக் நிர்வாகம் சான்றிதழ் சரிபார்ப்பில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, வருவாய்த் துறையினருடன் இணைந்து, இணைய வசதியை கடந்தாண்டு வடிவமைத்தது. இறுதிக்கட்டத்தை எட்டிய இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டத்தின் மர்மம் என்ன.
10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்கு பின், பெற்றோர் பிள்ளைகளுக்கு எந்த பள்ளி, கல்லுாரியில் இடம் கிடைக்கும்; அதற்கான பணத்திற்கு என்ன செய்வது என்ற நிலையில் உள்ளனர்.
இதனிடையே வருவாய்த் துறையினரின் சான்றிதழ் பெருவதற்கு பெற்றோர்களை நிலைகுலைய வைக்கிறது.
எனவே, மாணவர்கள், பெற்றோர்கள் அலையாமல் சான்றிதழ் பெறுவதற்கு, சான்றிதழ் சரிபார்ப்பு இணைய வசதியை அரசு மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.