தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாகூர் பள்ளியில் கழிப்பறை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்  

பாகூர் பள்ளியில் கழிப்பறை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்  

பாகூர் பள்ளியில் கழிப்பறை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்  


ADDED : மே 25, 2026 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2026 11:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில், கழிப்பறை அமைக்கும் பணியை விரைந்து முடித்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்குள்ள, கழிப்பறை சேதமாகி பயன்படுத்த முடியாத நிலைக்கு போனது. இதனால், மாணவர்கள் சாலையோரங்களில் சிறுநீர் கழிக்கும் அவல நிலை இருந்து வருகிறது. மேலும், தெற்கு பகுதி மதில் சுவரும் இடிந்து விழுந்து சேதமானதால், பாதுகாப்பற்ற நிலை இருந்து வந்தது. இதனையடுத்து, பொதுப்பணித்துறை சிறப்பு கட்டடம் பிரிவு சார்பில் 34 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவில், கழிப்பறை மற்றும் மதில் சுவர் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்கான பணியினை, பூமி பூஜை செய்து வைத்து, கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இதையடுத்து, மதில் சுவர் மற்றும் கழிப்பறை கட்டடம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வந்தது. சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கபட்ட பின்னர் கட்டுமான பணிகள் தடைபட்டதாக கூறப்படுகிறது.

தற்போது, மதில் அவர் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கழிப்பறை கட்டடம் அஸ்திவார  பில்லர்களுடன் பணிகள் கிடப்பில் உள்ளது. கோடை விடுமுறை பள்ளிகள் இன்னும் சில நாட்களில் திறக்கப்பட உள்ளது.  எனவே, பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில், கழிப்பறை அமைக்கும் பணியை விரைந்து முடித்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us