/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்
/
பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்
ADDED : ஆக 20, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை மந்தைவெளி திடலில் அமைந்துள்ள பூமி நிலா சமேத சத்யநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கோகுலஷ்டமி யொட்டி வரும் 26ம் தேதி உறியடி உற்சவம் நடக்கிறது. அன்று காலை 9.00 மணிக்கு கோ பூஜை, மகா திருமஞ்சனம், அபிேஷக ஆராதனைகளும், மாலை 5.00 மணிக்கு உறியடி உற்சவமும், மாலை 6.00 மணிக்கு கிருஷ்ணபகவான் விஷ்ணு அவதாரத்தில் வீதியுலா நடக்கிறது.
ஏற்பாடுகளை மடுகரை கிராம மக்கள் செய்துள்ளனர்.