/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேணுகோபால சாமி கோவிலில் இன்று உறியடி உற்சவம்
/
வேணுகோபால சாமி கோவிலில் இன்று உறியடி உற்சவம்
ADDED : ஆக 27, 2024 04:29 AM
புதுச்சேரி : முத்தியால்பேட்டை ருக்குமணி சத்யபாமா சமேத வேணு கோபால சாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, இன்று உறியடி உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது.
முத்தியால்பேட்டையில் உள்ள தெபாசன்பேட் பகுதியில் ருக்குமணி சத்யபாமா சமேத வேணு கோபால சாமி கோவில் உள்ளது. 13ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி பிரமோற்சவ விழாவையொட்டி, கடந்த 17ம் தேதி, பூர்வாங்கம், பகவத் அனுஞ்ஜை ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. அதனை தொடர்ந்து, ஏகாந்த சேவை அலங்காரம், 19ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
தொடர்ந்து, 20ம் தேதி ராமர் பட்டாபிேஷகம் நடந்தது. 21ம் தேதி, சயன சேவை அலங்காரம், 22ம் தேதி பரமபத நாதன் அலங்காரம், 23ம் தேதி, கருட வாகன அலங்காரம் நடந்தது.
அதனை அடுத்து, 24ம் தேதி ராஜகோபலன் அலங்காரம், 25ம் தேதி வேணுகோபால அலங்காரம், கோலாஷ்டமியையொட்டி, நேற்று சிறப்பு ஹோமம் நடந்தது.
இன்று 27ம் தேதி முக்கிய நிகழ்வான, திருபள்ளியெழுச்சி, திருப்பாவை, மூலவர், உற்சவம் திருமஞ்சனம் நிகழ்ச்சி அடுத்து, மாலை 7:00 மணிக்கு வெண்ணைத்தாழி அலங்கார உற்சவத்தை தொடர்ந்து உறியடி நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை 9:00 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

