/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி கலால் து றை உரி மத்தை பயன்படுத்தி ரூ. 25 லட்சம் மோசடி
/
போலி கலால் து றை உரி மத்தை பயன்படுத்தி ரூ. 25 லட்சம் மோசடி
போலி கலால் து றை உரி மத்தை பயன்படுத்தி ரூ. 25 லட்சம் மோசடி
போலி கலால் து றை உரி மத்தை பயன்படுத்தி ரூ. 25 லட்சம் மோசடி
ADDED : செப் 05, 2024 05:12 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் போலி கலால் துறை உரிமம் மற்றும் காசோலை பயன்படுத்தி ரூ. 25 லட்சம் மோசடி செய்த மதுபான கடை மேலாளரை, போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி வ.உ.சி., வீதியைச் சேர்ந்தவர் இந்துமதி செல்வபாண்டியன். ரேவதி குருப்ஸ் உரிமையாளர். இவருக்கு 5 சில்லரை மதுபான கடைகள், ரெஸ்டோ பார்களும் உள்ளது.
இவரது நிறுவனத்தில் கடந்த 2022ம் ஆண்டு தவளக்குப்பம், பூரணாங்குப்பம், கடலுார் சாலையைச் சேர்ந்த இளங்கோ மகன் யோகேஷ் (எ) யோகேஷ்வரன், 34; என்பவரை காந்தி வீதியில் உள்ள எம்.பி.டம்பியூ., ரெஸ்டோ பாரில் மேலாளராக நியமித்தனர்.
யோகேஸ்வரன் மதுபான வினியோகஸ்தர்கள், பிரநிதிகளிடம் பேசி அனைத்து மதுபான கடைகளுக்கு தேவையான மதுபானம் வாங்க பில் போடுவது, கலால் துறையில் பர்மிட் போட்டு மதுபானம் வாங்குவது, வங்கி பரிவர்த்தனைகளை கவனித்து வந்தார்.
யோகேஸ்வரன் கடந்த ஆண்டு தனது அலுவலகத்தில் இருந்த காசோலையில், போலி கையெழுத்திட்டு பண மோசடி செய்ததாகவும், மதுபானம் வாங்க பர்மிட் போட்டு பெற்ற மதுபானங்களை கடைகளுக்கு சப்ளை செய்யாமல் ஏமாற்றியதாகவும், கலால் துறையில் தனக்கு வழங்கிய லைசன்சை காந்தி வீதி ஏ.ஆர். டிஜிட்டல் உரிமையாளர் அன்பு மற்றும் யோகேஸ்வரன் இருவரும் இணைந்து போலி கலால் துறை லைசன்ஸ் ஒன்றை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு மொத்தம் ரூ. 25 லட்சம் வரை ஏமாற்றி உள்ளதாக உரிமையாளர் இந்துமதி செல்வபாண்டியன் ஒதியஞ்சாலை போலீசில் மேலாளர் யோகேஷ்வரன் மீது புகார் அளித்தார்.
போலீசார் யோகேஷ்வரன் மீது மோசடி, போலியான ஆவணம் தயாரித்து ஏமாற்றுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.