/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்
/
ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்
ADDED : மே 10, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் நலவழித்துறை சார்பில் 28 ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.
காரைக்கால் மாவட்டத்தில் நலவழித்துறை சார்பில் புனித ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து போடும் முகாம் நலவழித்துறை கூட்ட அரங்கத்தில் நேற்று நடந்தது.
புதுச்சேரி ஹஜ் கமிட்டி தலைவர் இஸ்மாயில் தலைமை தாங்கினார். நோய் தடுப்பு திட்ட அதிகாரி டாக்டர் தேனாம்பிகை முன்னிலை வகித்தார்.
முகாமில் காரைக்காலை சேர்ந்த 28 ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து போடப்பட்டது.