/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வள்ளலார் சர்வதேச மைய பிரச்னை வடலுாரில் அமைதி பேச்சுவார்த்தை
/
வள்ளலார் சர்வதேச மைய பிரச்னை வடலுாரில் அமைதி பேச்சுவார்த்தை
வள்ளலார் சர்வதேச மைய பிரச்னை வடலுாரில் அமைதி பேச்சுவார்த்தை
வள்ளலார் சர்வதேச மைய பிரச்னை வடலுாரில் அமைதி பேச்சுவார்த்தை
ADDED : ஏப் 24, 2024 07:11 AM

வடலுார் : வடலுாரில் வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினருடன், அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
வடலுார் நகராட்சி அண்ணா திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் ஆர்.டி.ஒ., அபிநயா தலைமை தாங்கினார். அறநிலைய துறை இணை ஆணையர் பரணிதரன், டி.எஸ்.பி., சபியுல்லா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பார்வதிபுரம் கிராம மக்கள், அரசியல் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது குறித்து தகவல்கள் டிஜிட்டல் படம் மூலம் வள்ளலார் தெய்வ நிலையை செயல் அலுவலர் ராஜா விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, பார்வதிபுரம் கிராம மக்கள் பேசுகையில், வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதனை பெருவெளியில் அமைக்கக்கூடாது. வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு எங்கள் மூதாதையர்கள் 106 ஏக்கர் நிலம் கொடுத்தனர், அதில் தற்போது 60 ஏக்கர்தான் உள்ளது. ஆக்கிரமிப்பில் உள்ள 46 ஏக்கரை மீட்டு அதில் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும் என ஒட்டுமொத்தமாக தங்கள் கருத்தை பதிவு செய்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வதிபுரம் கிராம மக்கள் 181 பேர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றனர்.
அதற்கு அதிகாரிகள், கிராம மக்கள் கோரிக்கைகள், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர். கூட்டத்தில் அறநிலைய துறை உதவி ஆணையர் சந்திரன், வடலுார் சேர்மன் சிவகுமார், தி.மு.க., நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க., நகர செயலாளர் பாபு, பா.ம.க .மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், மா.கம்யூ., நகர அமைப்பாளர் இளங்கோவன், வி.சி., கட்சி நகர செயலாளர் ஜோதிமணி, பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன், ராஜேந்திரன், ஆசிரியர்கள் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், ஜெயவிஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

