/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'கிராமங்களிலும் மோடியை தெரிந்திருக்கிறது' வானதி சீனிவாசன் பெருமிதம்
/
'கிராமங்களிலும் மோடியை தெரிந்திருக்கிறது' வானதி சீனிவாசன் பெருமிதம்
'கிராமங்களிலும் மோடியை தெரிந்திருக்கிறது' வானதி சீனிவாசன் பெருமிதம்
'கிராமங்களிலும் மோடியை தெரிந்திருக்கிறது' வானதி சீனிவாசன் பெருமிதம்
ADDED : ஏப் 07, 2024 05:36 AM

புதுச்சேரி : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கிராமங்களில் பிரதமர் மோடியை நன்றாக தெரிந்திருக்கிறது என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
புதுச்சேரி, இ.சி.ஆர் சாலையில், பா.ஜ., மகளிர் அணி சார்பில், தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் செல்வ கணபதி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது:
இந்தியா முழுதும், இன்று ஒரு பிரதமரையும் அவரது ஆட்சியையும் முன்னிறுத்தி ஓட்டு கேட்கும் ஒரே கூட்டணி, தே.ஜ., கூட்டணி மட்டும் தான். கடந்த, 2019ல், பிரதமர் மோடிக்கு எதிரான அலை, இங்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. தற்போது அந்த நிலை மாறி இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கிராமங்களில் கூட, பிரதமர் மோடியை நன்றாக தெரிந்திருக்கிறது.
தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. தமிழகத்தில், தி.மு.க, அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர். பா.ஜ.,வை வசை பாடினால் தான், சீமான் உள்ளிட்டோரால் அரசியல் செய்ய முடியும்.
ஒவ்வொரு தொகுதியிலும், வேட்பாளரை நிறுத்த பல்வேறு காரணங்கள் இருக்கிறது. வெற்றிக்கான பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து தான், வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், 39 தொகுதிகளில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெறும்.
கேரளாவில், கம்யூ., மற்றும் காங்., எதிரெதிர் அணியில் நிற்கின்றன. இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க போகிறார் களா.. இண்டியா கூட்டணியின் ஏமாற்றத்தை பொதுமக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

