/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வட்ட அளவில் கைப்பந்து போட்டி வாணிதாசனார் அரசு பள்ளி வெற்றி
/
வட்ட அளவில் கைப்பந்து போட்டி வாணிதாசனார் அரசு பள்ளி வெற்றி
வட்ட அளவில் கைப்பந்து போட்டி வாணிதாசனார் அரசு பள்ளி வெற்றி
வட்ட அளவில் கைப்பந்து போட்டி வாணிதாசனார் அரசு பள்ளி வெற்றி
ADDED : ஆக 08, 2024 12:32 AM

பாகூர் : கல்வித்துறை சார்பில், நடந்த வட்டார அளவிலான கைப்பந்து போட்டியில் சேலியமேடு கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
புதுச்சேரி கல்வி துறை வட்டம் - 3 சார்பில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுவர் கைப்பந்து போட்டி, கரையாம்புத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், 35 அணிகள் பங்கேற்றன.
இதில், சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி அணியினர் சிறப்பாக விளையாடி முதலிடத்தை பிடித்தனர். கரையாம்புத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாமிடம், ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடம் பிடித்தன.
முதல் பரிசு பெற்ற கவிஞரேறு வாணிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் வாஞ்சிநாதன், உடற்கல்வி ஆசிரியர் தனிகைகுமரன் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் கிராம மக்கள் பாராட்டினர்.