ADDED : மார் 30, 2024 06:46 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : முத்தியால்பேட்டை வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர் சுஜாதா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பள்ளி முதல்வர் மாரிமுத்து வரவேற்றார். துணை முதல்வர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக நளினி சிறப்புரை நிகழ்த்தி, மழலையர் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி, பாராட்டினார்.
உணவே மருந்த என்ற தலைப்பில் மாணவர்கள் நாடகம், சிறுதானிய உணவுகள், பாரம்பரிய உடைகள் போன்ற கலை நடனங்கள் ஆகியவை குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் மாலதி நன்றி கூறினார்.
