sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வி.சி., கொடி கம்பம் நட்ட 5 பேர் மின்சாரம் பாய்ந்து படுகாயம்

/

வி.சி., கொடி கம்பம் நட்ட 5 பேர் மின்சாரம் பாய்ந்து படுகாயம்

வி.சி., கொடி கம்பம் நட்ட 5 பேர் மின்சாரம் பாய்ந்து படுகாயம்

வி.சி., கொடி கம்பம் நட்ட 5 பேர் மின்சாரம் பாய்ந்து படுகாயம்


ADDED : ஆக 18, 2024 04:07 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார், : வானுார் அருகே வி.சி., கட்சிக் கொடி கம்பம் நடும்போது, மின்சாரம் தாக்கியதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, விழுப்புரம் மாவட்டம் வானுார் அடுத்த சின்னகாட்ராம்பாக்கத்தை சேர்ந்த வி.சி., கட்சியினர் புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலை சந்திப்பில் நேற்று காலை 8:50 மணிக்கு, 20 அடி உயர இரும்பு கொடிக் கம்பத்தை நட நிமிர்த்தினர்.

அப்போது, உயர்மின் அழுத்த கம்பியில் கொடி கம்பம் உரசியதில், மின்சாரம் பாய்ந்து, கம்பத்தை துாக்கிய அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மோகன்,22; வேலு மகன் அருண்பாண்டியன்,22; காந்தாமணி,53; சக்திவேல் மகன் அஸ்விந்த்,12; அருள் மகன் அமர்நாத்,17; ஆகியோர் படுகாயமடைந்தனர்.

உடன், அவர்கள் 5 பேரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us