/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணம் கேட்டு மிரட்டிய வி.சி., நிர்வாகி கைது
/
பணம் கேட்டு மிரட்டிய வி.சி., நிர்வாகி கைது
ADDED : செப் 01, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், : பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வி.சி., கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலத்தைச் சேர்ந்தவர் முத்தமிழன்,55; இவர், சோழம்பட்டு கூட்ரோடில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.
இவரிடம், வி.சி.,கட்சியின் சங்கராபுரம் மேற்கு ஒன்றிய செயலாளரான, சோழம்பட்டை சேர்ந்த வேலு (எ) சிந்தனைவளவன்,45; வரும் 6ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடக்க உள்ள கட்சி மாநாட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டினார்.
இதுகுறித்து முத்தமிழன் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து, சிந்தனைவளவனை கைது செய்தனர்.