/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் சொத்துகளை மீட்கக் கோரி எம்.எல்.ஏ., மனு
/
வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் சொத்துகளை மீட்கக் கோரி எம்.எல்.ஏ., மனு
வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் சொத்துகளை மீட்கக் கோரி எம்.எல்.ஏ., மனு
வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் சொத்துகளை மீட்கக் கோரி எம்.எல்.ஏ., மனு
ADDED : மே 17, 2024 05:32 AM

புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பல்வேறு அமைப்பினர் கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில், புதுச்சேரி, வேதபுரிஸ்வரர், வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயற்சி நடக்கிறது. கடந்த 12 ஆண்டுகளாக செயல் அலுவலர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்து அபகரிக்கபடும் நிலையில் இருந்தது.
அபகரிப்பாளர்கள் தவறான தகவல்கள் மூலம் தொடுத்த வழக்கில் சுப்ரீம் கோர்ட், இச்சொத்தை அவர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டது. குறுகிய காலகெடுவிற்குள் இச்சொத்தை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி, கவர்னர், இந்து அறநிலைய துறை செயலர் ஆகியோருக்கு புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், முதல்வரின் ஒப்புதலுடன் அதிகாரிகள் கோவில் சொத்தினை மீட்டு அதை கோவில் வசம் ஒப்படைக்க இந்து அறநிலைய துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து இந்து அறநிலைய துறை கமிஷனர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோவில் சொத்தை மீட்க வேண்டும்.
இதேபோல் வேதபுரிஸ்வரர் தேவஸ்தானத்தின் பல சொத்துகள் பலரால் அபகரிக்கப்படும் சூழல் உள்ளது. குறிப்பாக முதலியார்பேட்டை ரயில்வே மேம்பாலம்,அரும்பார்த்தபுரம் செல்லும் புதிய பைபாஸ்,ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள கோவில் சொத்து அபகரிக்க முயற்சி நடக்கின்றது. அதனையும் தடுத்து மீட்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

