ஆத்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி பயிற்சி முகாம்
ஆத்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி பயிற்சி முகாம்
ADDED : ஜூன் 13, 2026 07:54 PM

புதுச்சேரி: திருக்கனுார் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான காலநிலை மாற்றம், காய்கறி சாகுபடி குறித்த பயிற்சி முகாம் சோரப்பட்டில் நடந்தது.
வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். காரைக்கால் வேளாண் அறிவியல் கல்லுாரி பேராசிரியர் நாராயணன் காலநிலை மாற்றத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும், வேளாண் அலுவலர் சுப ஆனந்தி மண் மாதிரி சேகரிப்பு மற்றும் மண்வளம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
பேராசிரியர் ஷர்லி காய்கறி பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, காய்கறி சாகுபடி முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். விவசாயி வீரப்பன், இயற்கை விவசாயம் மற்றும் மதிப்பு கூட்டுதலை விளக்கினார்.
மொபைல் செயலிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பயிர்களில் ஏற்படும் நோய்களைத் துல்லியமாகக் கண்டறிந்து நிவர்த்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், செயல் விளக்க உதவியாளர் பாலசுப்ரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார். முகாமில் சோரப்பட்டு, அதனை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் பங்கேற்றனர்.
