/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வித்யா பவன் மேல்நிலைப் பள்ளி சாதனை
/
வித்யா பவன் மேல்நிலைப் பள்ளி சாதனை
ADDED : மே 12, 2024 05:08 AM

புதுச்சேரி: புதுச்சேரி தேங்காய்திட்டு வித்யாபவன் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் மாணவி ஹரினி 97.5 சதவீதம் மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவி எனாசஷிசர்மா 96 சதவீதம் பெற்று இரண்டாமிடமும், மாணவி வனிசா பிரான்சின் 95 சதவீதம் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவி பர்கத் ஆயிஷா 98 சதவீதம் பெற்று முதலிடம், மாணவர் கைலாஷ் 96 சதவீதம் பெற்று இரண்டாமிடம், மாணவி வைஷ்ணவி, மாணவர் கஜேந்திரன் ஆகியோர் 95 சதவீதம் மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
பத்தாம் வகுப்பில் 460 மதிப்பெண்களுக்கு மேல் 27 பேரும், மாணவி பர்கத் ஆயிஷா ஆங்கிலத்திலும், மாணவர் ரவி கணிதத்திலும், மாணவன் சித்தார்த் அறவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை வித்யாபவன் பள்ளி குழுமத்தின் தலைவர் ராஜசேகரன், பள்ளி முதல்வர் ரேகா ராஜசேகரன் பாராட்டினர்.
அவர்கள் கூறுகையில், 'இந்த வெற்றிக்கு வித்திட்ட அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு நன்றி என, தெரிவித்தார்.