ADDED : பிப் 23, 2025 05:42 AM

புதுச்சேரி : தேங்காய்த்திட்டு வித்யா பவன் மேல்நிலைப் பள்ளியின் 15வது ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு, வித்யா பவன் பள்ளி குழுமத்தின் சேர்மன் ராஜசேகரன் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ரேகா ராஜசேகரன் வரவேற்றார்.
பாஸ்கர் எம்.எல்.ஏ., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை இயக்குனர் இளங்கோவன், பாரதிதாசன் டிரஸ்ட் தலைவர் கலைமாமணி பாரதி ஆகியோர் கலந்து கொண்டு, கடந்தாண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சால்வை அணிவித்து கேடயம் மற்றும் ரொக்க பரிசு வழங்கினர்.
தொடர்ந்து, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை வகுப்பு வாரியாக, முதல் இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் 100 சதவீதம் வருகை பதிவேட்டினை பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

