/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விழுப்புரம் -நாகை புறவழிச்சாலை பணி கிடப்பில் மின் கோபுரத்தை மாற்றி அமைக்காததால் சிக்கல்
/
விழுப்புரம் -நாகை புறவழிச்சாலை பணி கிடப்பில் மின் கோபுரத்தை மாற்றி அமைக்காததால் சிக்கல்
விழுப்புரம் -நாகை புறவழிச்சாலை பணி கிடப்பில் மின் கோபுரத்தை மாற்றி அமைக்காததால் சிக்கல்
விழுப்புரம் -நாகை புறவழிச்சாலை பணி கிடப்பில் மின் கோபுரத்தை மாற்றி அமைக்காததால் சிக்கல்
ADDED : ஜூன் 19, 2024 05:34 AM

பாகூர் : புதுச்சேரி அரசின் மெத்தன போக்கால்,6431 கோடி ரூபாய் மதிப்பிலான மத்திய அரசின் சாலை போக்குவரத்து திட்டம்பயன்பாட்டிற்கு வருவது எப்போது என்பது பெரும் கேள்வி குறியாக உள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே புறவழிச்சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. விழுப்புரம் முதல் எம்.என். குப்பம் வரை 29 கிலோ மீட்டர் துாரத்தில், கண்டமங்கலம் ரயில்வே கேட் மேம்பாலம் தவிர்த்து, மற்ற பகுதியில் சாலை பணிகள் முடிந்த நிலையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்டமான புதுச்சேரி (எம்.என்.குப்பம்) முதல் கடலுார் பூண்டியாகுப்பம் வரையிலான 37 கி.மீ., துாரத்திற்கான சாலை பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், புதுச்சேரி எல்லை பகுதியில் உயர் மின் கோபுரங்கள் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளதால் சாலை பணி பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாகூர் - கன்னியக்கோவில் புறவழிச்சாலை மேம்பாலம் சந்திப்பு பகுதியில் 3 இடங்களில் உயர் மின் பாதை குறுக்காக செல்வதால், அங்கு 10 உயர் மின் கோபுரங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.
இழப்பீட்டு தொகையை உயர்த்தி கேட்டு அப்பகுதி விவசாயிகள், நிலத்தின் வழியாக டவர் லைனைமாற்றி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டவர் லைன் மாற்றி அமைக்கப்பட்டால் தான், பாகூர் - கன்னியக்கோவில் சாலை சந்திப்பு மேம்பாலத்தின் கட்டுமான பணியை தொடர முடியும் என்ற நிலையில், அவை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஒத்துழைப்புடன்100க்கும் மேற்பட்ட இடங்களில் உயர் மின் கோபுரங்கள்மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி எல்லை பகுதியில்அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், பணி தடைபட்டுள்ளது.
புதுச்சேரி அரசின்மெத்தன போக்கால்,6431 கோடி ரூபாய் மதிப்பிலான மத்திய அரசின் சாலை போக்குவரத்து திட்டம்பயன்பாட்டிற்கு வருவது எப்போது என்பது கேள்வி குறியாக உள்ளது.
எனவே, டவர் லைன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கை நிறைவேற்றி, புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.