/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகர் சதுர்த்தி விழா எதிர்க்கட்சி தலைவர் தரிசனம்
/
விநாயகர் சதுர்த்தி விழா எதிர்க்கட்சி தலைவர் தரிசனம்
விநாயகர் சதுர்த்தி விழா எதிர்க்கட்சி தலைவர் தரிசனம்
விநாயகர் சதுர்த்தி விழா எதிர்க்கட்சி தலைவர் தரிசனம்
ADDED : செப் 08, 2024 05:55 AM

புதுச்சேரி: போத்தீஸ் ஆட்டோ சங்கம் சார்பில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, பொதுக்குழு உறுப்பினர் கோபால் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி போத்தீஸ் ஆட்டோ சங்கம் சார்பில், 18ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், எதிர்க்கட்சி தலைவர் சிவா, உருளையான்பேட்டை தொகுதி தி.மு.க., பொறுப்பாளர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, அன்னதானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில், போத்தீஸ் பொது மேலாளர் பாலமுருகன், தொகுதி செயலாளர் சக்திவேல், தொண்டரணி வீரய்யன், வர்த்தகர் அணி சொல்தா ரவி, பாபு, கிளைச்செயலாளர் அகிலன், துணை செயலாளர் வைரவேல், ஆட்டோ சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் வேலு, பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் மனோகரன், முருகன், சீனு, தங்கராஜ், விநாயகமூர்த்தி, மாயா, முருகன் மற்றும் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டனர்.