/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகா மிஷன் கல்லுாரி விளையாட்டு திருவிழா
/
விநாயகா மிஷன் கல்லுாரி விளையாட்டு திருவிழா
ADDED : ஜூன் 15, 2024 04:51 AM

புதுச்சேரி: கிருமாம்பாக்கம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி சார்பில் விளையாட்டு திருவிழா நடந்தது.
பல்கலை வேந்தர் கணேசன் அறிவுரைப்படி நடந்த விழாவிற்கு, விநாயக மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிகளின் டீன் செந்தில்குமார் தலைமை தாங்கி, ஜோதியை ஏற்றி, சுழற்கோப்பையை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
இயக்குனர் ஆன்ட்ரூ ஜான் வரவேற்றார். ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரி டீன் ராகேஷ் சேகல், வெயிட் லிப்டிங் கோச் ராஜேஷ், ஹேண்ட் பால் டீம் கோச் சத்தியா, அரவிந்த் வெயிட் லிப்டிங் சாம்பியன் ஆகியோர் பேசினர்.
சிறப்பு விருந்தினர்களுக்கு டீன் செந்தில்குமார் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். பின் கொடி ஏற்றுதல், ஜோதி ஓட்டம், மாணவர்களின் கொடி அணிவகுப்பு நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு அணியின் பெயர் பலகை மற்றும் வெற்றி கோப்பை அறிமுகப் படுத்தப்பட்டது.
இறுதியில் மாணவர்களின் சிறப்பு படைப்பாக சிலம்பம், யோகா மற்றும் பிரமிடு அமைப்பு நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, உடற்கல்வி இயக்குனர் பூமணி, மாணவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் வளர்மதி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு வர்தன், நுண்கலை அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சவீதா, ஐயம்மா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.