தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விநாயகா மிஷன் மாணவர்கள் உடற்கூறாய்வு பயிற்சியில் பங்கேற்பு

விநாயகா மிஷன் மாணவர்கள் உடற்கூறாய்வு பயிற்சியில் பங்கேற்பு

விநாயகா மிஷன் மாணவர்கள் உடற்கூறாய்வு பயிற்சியில் பங்கேற்பு


ADDED : மே 15, 2024 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2024 01:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை தடய அறிவியல் துறை மாணவர்கள் உடற்கூறாய்வு பயிற்சியில் பங்கேற்றனர்.

விநாயகா மிஷன் பல்கலைக்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஆறு படை வீடு மருத்துவமனை வளாகங்களில் அமைந்துள்ள தடய அறிவியல் தொழில்நுட்ப பிரிவு மூலம் மாணவர்களுக்கு துறை ரீதியான திறனை மேம்படுத்தும் நோக்கில் பல்கலை வேந்தர் கணேசன் அறிவுறுத்தலின் படி, புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் உடற்கூறு ஆய்வு குறித்த மூன்று நாள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

டீன் செந்தில்குமார் வழிகாட்டுதலின்படி, தடய அறிவியல் தொழில் நுட்ப மாணவர்கள், உடற்கூறாய்வு பயிற்சியில் பங்கேற்றனர். இதில், உடற்கூறாய்வு எவ்வாறு செய்யப்படுகிறது. இறப்பின் போது உடல் உறுப்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது. அதில் ஏற்படும் மாற்றம், கொலை, தற்கொலை போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் மரணங்களில் உடற்கூறாய்வு மூலம் சேகரிக்கப்படும் விபரங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை துறை பொறுப்பாளர்கள் மோகன், கோமதி, லின்சி செய்திருந்தனர்.

இந்தாண்டு முதல் சென்னை பையனுாரில் உள்ள ஆறுபடைவீடு தொழில் நுட்ப கல்லுாரி வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை தடய அறவியல் தொழிற்நுட்ப பிரிவு புதியதாக துவங்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us