/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் விதிமீறல்; அ.தி.மு.க., செயலாளர் குற்றச்சாட்டு

ADDED : ஏப் 20, 2024 05:00 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., தேர்தல் விதிமீறல்களில் ஈடுப்பட்டதாக அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கூறினார்.
அவர் கூறியதாவது;
புதுச்சேரியில் தேர்தல் விதிகளை ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி தி.மு.க., எம்.எல்.ஏ.கள் மீறுகின்றனர். இதனை தேர்தல் நடத்தும் அதிகாரி தடுக்காமல் வேடிக்கை பார்கின்றனர்.
இந்திய தேர்தல் ஆணைய விதிப்படி ஒரு எம்.எல்.ஏ., அல்லது எம்.பி., அமைச்சரோ யாரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஏஜென்ட் ஆக முடியாது என, தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல் கொடுத்துள்ளது.
அதன் அடிப்படையில் தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும் பூத்களில் வேட்பாளர் மற்றும் அவரது ஏஜென்ட் மட்டும் ஓட்டுச்சாவடிகக்குள் சென்று வரலாம். ஆனால் புதுச்சேரியில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.கள் மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ.கள் தடையின்றி தன்னுடைய பாதுகாவலர்களுடன் ஓட்டுச்சாவடிக்குள் சென்று வருகின்றனர்.
ஓட்டு அளிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள் இவர்களை பார்த்து பயந்து ஒதுங்கும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதுச்சேரி மாநில தேர்தல் துறை இந்த தேர்தலை நடத்தவில்லை. ஆளும் கட்சியும், சில எம்.எல்.ஏ.களும் சேர்ந்து தேர்தலை முறைகேடாக நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் அனுப்படும்' என்றார்.