/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்களை ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்ட விருதுநகர் யுடியூபர் புதுச்சேரியில் கைது
/
பெண்களை ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்ட விருதுநகர் யுடியூபர் புதுச்சேரியில் கைது
பெண்களை ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்ட விருதுநகர் யுடியூபர் புதுச்சேரியில் கைது
பெண்களை ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்ட விருதுநகர் யுடியூபர் புதுச்சேரியில் கைது
ADDED : மே 30, 2024 11:10 PM

புதுச்சேரி:பெண்களை ஆபாசமாக பேசி ஆடியோ, வீடியோக்களை பதிவிட்ட பிரபல யுடியூபரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர். அவரது இரண்டு யுடியூப் சேனல்களையும் முடக்கினர்.
விருதுநகர் மாவட்டம், படந்தால் கிராமத்தை சேர்ந்தவர் பி.கே. விஜய் என்கிற துர்க்கைராஜ், 37; யுடியூபரான இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக ஈவிள் லவ் எடிஸ் மற்றும் ஈவிள் லவ் சாங்க்ஸ் என்ற பெயரில் இரண்டு யுடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
அவரது யுடியூப் சேனலை பார்த்த பலர், யுடியூப் சேனல் துவக்குவது எப்படி, நிறைய சப்ஸ்கிரைபர்களை சேனலுக்கு வரச்செய்வது எப்படி என, தொடர்பு கொண்டு கேட்டு வந்தனர்.
அதன்படி, புதுச்சேரியை சேர்ந்த 35 வயது பெண், யுடியூப் சேனல் துவங்குவது தொடர்பாக, துர்க்கைராஜிடம் பேசி, பழகி வந்துள்ளார். பின், துர்க்கைராஜிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகிவிட்டார்; பேசுவதையும் துண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த துர்க்கைராஜ், இதற்கு முன் அப்பெண் பேசிய ஆடியோ, வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து, அவரது சேனலில் பதிவேற்றம் செய்தார்.
அப்பெண் தவறான தொழில் செய்பவர் என்று தனது யுடியூப் சேனலில் லைவ்வாக பலமுறை பேசி உள்ளார். அந்த ஆடியோ, வீடியோவை பல ஆயிரம் நபர்கள் பார்த்து கமெண்ட் செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர்.
அவரது யுடியூப் சேனலை ஆராய்ந்ததில், துர்க்கைராஜ், இருபதுக்கும் மேற்பட்ட பெண்களை இதேபோல் இழிவுபடுத்தி பேசி வீடியோ, ஆடியோ பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. ஆண்களையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி ஆடியோ பதிவேற்றம் செய்தது தெரிந்தது.
துர்க்கைராஜ் மதுரையில் தங்கி இருப்பதை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர்.
நேற்று மதுரை விரைந்த சைபர் கிரைம் போலீசார், அங்கு நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த துர்க்கைராஜை கைது செய்து, புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர். அவரை, புதுச்சேரி குற்றவியல் நீதிபதி மோகன் முன்பு ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். துர்க்கைராஜின் இரண்டு யுடியூப் சேனல்களையும் முடக்கினர்.
இவ்வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் தலைமையிலான போலீசாரை எஸ்.பி., கலைவாணன் பாராட்டினார்.
அவர் கூறுகையில், 'யுடியூப் சேனல்களில் யாரை பற்றியும் அவதுாறான கருத்துக்களை பதிவிடுவது, சிறார்கள் மற்றும் பெண்களை பற்றி தவறாக சித்தரித்து வெளியிடுவது, பொய்யான தகவல்களை பரப்புவது குற்றமாகும். இதுபோன்ற செயலில் ஈடுபடும் யுடியூபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.