/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமன்வெல்த் பவர் லிப்டிங் போட்டியில் விஷால்:நடுவராக புதுச்சேரி பயிற்சியாளர் தேர்வு
/
காமன்வெல்த் பவர் லிப்டிங் போட்டியில் விஷால்:நடுவராக புதுச்சேரி பயிற்சியாளர் தேர்வு
காமன்வெல்த் பவர் லிப்டிங் போட்டியில் விஷால்:நடுவராக புதுச்சேரி பயிற்சியாளர் தேர்வு
காமன்வெல்த் பவர் லிப்டிங் போட்டியில் விஷால்:நடுவராக புதுச்சேரி பயிற்சியாளர் தேர்வு
ADDED : செப் 05, 2024 05:19 AM

திருபுவனை: தென்ஆப்ரிக்காவில் நடைபெறும் பொது மற்றும் சிறப்பு பிரிவினருக்கான பவர் லிப்டிங் (வளு துாக்கும்) சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் புதுச்சேரி வீரர் விஷால் பங்கேற்கிறார். அவரது பயிற்சியாளர் பாக்கியராஜ் நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி நைனார்மண்டபத்தில் கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் 'டே பிரேக்கர் உடற்பயிற்சிக் கூடத்தில் 28 பள்ளி மாணவர்கள், 4 மாணவிகள் உள்பட 32 பேர் பயிற்சி பெறுகின்றனர்.
சர்வதேச (காமன்வெல்த்) பவர் லிப்டிங் (வளு துாக்கும்) போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தம்பதிகளான பாக்கியராஜ் - சூர்யபிரபா ஆகியோர் பயிற்சிக் கூடத்தை நடத்தி வருகின்றனர்.
பாக்கியராஜ் புதுச்சேரி கால்நடைத்துறையில் யு.டி.சி.,யாகவும், சூர்யபிரபா வி.ஏ.ஓ., வாகவும் பணிபுரிகின்றனர்.
இந்த மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 11 பேர் அகில இந்திய அளவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இம்மையத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வரும் மதகடிப்பட்டு, முல்லை வீதி திருநாவுக்கரசு - சுந்தரி தம்பதியின் மகன் விஷால், 22, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த சிறப்பு பிரிவினருக்கான பவர் லிப்டிங் போட்டியில், 59 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இதனிடையே தென்னாப்பிரிக்காவில் வரும் அக்., 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கும் பொது மற்றும் சிறப்பு பிரிவினருக்கான பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் விளையாட புதுச்சேரி வீரர் விஷால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதே போல், நடுவராக அவரது பயிற்சியாளர் பாக்கிராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.