/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தா பள்ளி 100 சதவீத தேர்ச்சி
/
விவேகானந்தா பள்ளி 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 10, 2024 11:35 PM

புதுச்சேரி- லாஸ்பேட்டை செல்லப்பெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 142 மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளி மாணவி ஹர்ஷினி 500க்கு, 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மாணவிகள் கமலிகா, சந்தியா, வர்ஷினி ஆகியோர் தலா 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2ம் இடம் பிடித்தனர். மாணவி அனுதாலட்சுமி 492 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 3வது இடம் பிடித்தார். 475 மதிப்பெண்களுக்கு மேல் 18 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 27 மாணவர்கள், 400 மதிப்பெண்களுக்கு மேல் 47 மாணவர்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் 2 மாணவர்களும், கணிதத்தில் 7 பேர் , அறிவியலில் 5, சமூக அறிவியல் பாடத்தில் 5 பேர் நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ் மொழிப்பாடத்தில் 48 மாணவர்களும், ஆங்கில பாடத்தில் 97 பேரும், கணித பாடத்தில் 40 பேரும், அறிவியலில் 43 மாணவர்கள், சமூக அறிவியலில் 41 மாணவர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவிகளை விவேகானந்தா கல்வி குழுமத்தின் நிறுவனர் செல்வகணபதி எம்.பி., பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, பள்ளி முதல்வர் கீதா ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.