தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கைப்பந்து போட்டி; சேலியமேடு பள்ளி 2ம் இடம்

கைப்பந்து போட்டி; சேலியமேடு பள்ளி 2ம் இடம்

கைப்பந்து போட்டி; சேலியமேடு பள்ளி 2ம் இடம்


ADDED : பிப் 27, 2025 06:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2025 06:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்; மாநில அளவிலான கைப்பந்து போட்டியில், சேலியமேடு வாணிதாசனார் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

திருக்கனூர் சுப்பிரமணிய பாரதி அரசு மேல்நிலை பள்ளியில், 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான, மாநில அளவிலான கைப்பந்து போட்டி, கடந்த வாரம் இரண்டு நாட்கள் நடந்தது. இதில், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 26 குழுவினர் பங்கேற்று விளையாடினர். இதில், சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளையாடி, இரண்டாம் இடம் பிடித்தனர்.

மேலும், இப்போட்டியில் சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசினை, வாணிதாசனார் பள்ளி மாணவர் வேணுபிரசாத் பெற்றார்.

சிறப்பாக விளையாடி சாதித்து வந்த மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, உடற்கல்வி ஆசிரியர் தணிகைகுமரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மக்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us