/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாகி, ஏனாம் பகுதிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு
/
மாகி, ஏனாம் பகுதிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு
மாகி, ஏனாம் பகுதிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு
மாகி, ஏனாம் பகுதிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு
ADDED : ஏப் 10, 2024 02:48 AM

புதுச்சேரி : மாகி, ஏனாம் பிராந்தியங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்கு, 967 ஓட்டுச்சாவடிகளில் 1934 ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 967 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தலுக்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் கணிணி மூலம் தற்செயல் கலப்பு முறையில் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டது.
இதில் மாகி பிராந்தியத்தில் உள்ள 31 ஓட்டுச்சாவடிகளுக்கு 86 பேலட் யூனிட், 43 கன்ட்ரோல் யூனிட், 43 வி.வி.,பாட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதேபோல் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள 33 ஓட்டுச்சாவடிகளுக்கு 92 பேலட் யூனிட், 46 கன்ட்ரோல் யூனிட், 46 வி.வி., பாட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் நேற்று காலை 9 மணிக்கு புதுச்சேரி ரெட்டியார்பாளையம் மாநில தேர்தல் துறை அலுவலகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாகி, பிராந்தியங்களுக்கு அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டன.
மாகி, ஏனாம் பிராந்தியங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒட்டு பதிவு இயந்திரங்களை நான் ஸ்டாப்பாக எங்கும் நிறுத்தாமல் அந்தந்த பிராந்தியங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எனவே எங்கேயும் நிறுத்தி ஓய்வு எடுக்காமல், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநில போலீசார் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டு, ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டன.
இரண்டாவது நாளாக இன்று 10 ம்தேதி புதுச்சேரி யில் உள்ள மூன்று ஓட்டு எண்ணிக்கை மையங்களில் உள்ள ஸ்டிராங் ரூமில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஓட்டு பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.
முன்னதாக, மாகி, ஏனாம் பிராந்தியங்களுக்கு அனுப்பப்பட்ட ஓட்டு பதிவு இயந்திரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.

