/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வ.உ.சி., பள்ளியில் உறுதி மொழி ஏற்பு
/
வ.உ.சி., பள்ளியில் உறுதி மொழி ஏற்பு
ADDED : ஆக 13, 2024 05:22 AM

புதுச்சேரி: பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூகநலத்துறை இணைந்து வ.உ.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சுதந்திர தினத்தையொட்டி, வ.உ.சி., மேல்நிலைப்பள்ளியில் நடந்த போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் குலோத்துங்கன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாணவர்கள் போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து, உறுதிமொழி ஏற்றனர்.
சிறப்பு விருந்தினராக கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி பங்கேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி பொறுப்பாசிரியர் பத்மாவதி, விரிவுரையாளர் கிரிஜா உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

