/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வ.உ.சிதம்பரனார், அன்னை தெரசா சிலைகளுக்கு மரியாதை
/
வ.உ.சிதம்பரனார், அன்னை தெரசா சிலைகளுக்கு மரியாதை
ADDED : செப் 06, 2024 04:18 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் வ.உ சிதம்பரனார் பிறந்த நாள் மற்றும் அன்னை தெரசா நினைவு தினத்தையொட்டி, அவர்களது சிலைகளுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரியில் விடுதலை போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார், 153 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பாரதி பூங்கா அருகில் உள்ள, அவரது சிலைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்., சார்பில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சீனியர் துறை தலைவர் தேவதாஸ், ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க சார்பில், மாநில செயலாளர் அன்பழகன் மரியாதை செலுத்தினார். இணை செயலாளர் கணேசன், திருநாவுக்கரசு, பொருளாளர் ரவி பாண்டுரங்கன் பங்கேற்றனர்.
வ.உ.சிதம்பரனார் சிலைக்கு, பா.ஜ., சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
பா.ஜ., மாநில சமூக ஊடக தலைவர் மகேஷ், மாநில அமைப்பாளர் ரவுத்திரம் சக்திவேல், முக்கிய பிரமுகர் செல்வக்குமரன், மாநில விவசாய அணி துணைத்தலைவர் பெருமாள் பங்கேற்றனர்.
அன்னை தெரசா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பாரதி பூங்கா அருகில் அவரது சிலைக்கு, அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., புதுச்சேரி - கடலுார் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
காங்., சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க சார்பில், மாநில செயலாளர் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர்.