sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்

கஞ்சா வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்

கஞ்சா வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்


ADDED : மே 15, 2024 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2024 01:08 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம், : கஞ்சா வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பெண் இன்ஸ்பெக்டருக்கு விழுப்புரம் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஜோதி. இவர், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபோது, பஸ் நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த பெருமாள் மகன் கார்த்திபன்,38; என்பவரை கைது செய்தனர்.

இவ்வழக்கு, விழுப்புரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையில், இன்ஸ்பெக்டர் ஜோதி கடந்த சில மாதங்களாக, ஆஜராகாததோடு, சம்மனையும் பெறவில்லை.

இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் இன்ஸ்பெக்டர் ஜோதி ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us