/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தண்ணீர் பாதுகாப்பு கருத்தரங்கம்
/
தண்ணீர் பாதுகாப்பு கருத்தரங்கம்
ADDED : ஏப் 28, 2026 07:41 PM
பாகூர்: புதுச்சேரி நலப்பணிச் சங்கம் சார்பில், சோரியங்குப்பம் முத்தமிழ்க் கூடல் இல்லத்தில், தண்ணீர் பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கில், மண்டல அமைப்பாளர் பவித்ரா வரவேற்றார். தலைவர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கி, கடல், ஏரி, ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் குறித்தும், வயலும் வாழ்வும் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
துணைத் தலைவர் காவலர் கணபதி, மண்டல அமைப்பாளர் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தனர். மருந்தாளுநர் கல்லுாரி மாணவி இசைமொழி நோக்கவுரையாற்றினார். மாணவிகள் பூஜா, ஹேமளா, பத்மஸ்ரீ, திவாஷினி ஆகியோர் தண்ணீர் சிக்கனம் குறித்து கருத்துரையாற்றினார்.
மாணவிகள் தர்ஷிகா, போனிஷா, சுடர்தேவி, சாரதா, பிரித்திகா, ஸ்ரீநதி ஆகியோர் நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு குறித்துப் பேசினர். மாணவிகள் நிஷாந்தி, சுபஸ்ரீ, வரலட்சுமி, வர்ஷா, ஞானஸ்ரீ, அனுஷ்கா, பிருந்தா, காவியா, நரேன்சஞ்சய் ஆகியோர் நீர் ஆதாரங்கள் குறித்து கருத்துரையாற்றினர்.
மாணவர்கள் களப்பயணமாக சென்று நெல் வயல் மற்றும் தண்ணீர் பாய்ச்சும் முறை குறித்து அறிந்து கொண்டனர். மண்டல அமைப்பாளர் கேசவர்த்தினி நன்றி கூறினார்.

