/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் பகுதியில் நாளை குடிநீர் 'கட்'
/
வில்லியனுார் பகுதியில் நாளை குடிநீர் 'கட்'
ADDED : மார் 09, 2025 03:51 AM
புதுச்சேரி : வில்லியனுார் குடிநீர் பிரிவு மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் குடிநீர் விநியோகம் தடைப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டம், செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பு:
வில்லியனுார் குடிநீர் பிரிவு மூலம் கோபாலன் கடை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நாளை (10ம் தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, அன்று மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரையில், கோபாலன்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதேபோல், பொறையூர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில், வரும் 11ம் தேதி, சேந்தநத்தம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் வரும் 13ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆகையால், அன்றைய தினம் மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரையில் பொறையூர் மற்றும் சேந்தநத்தம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும். இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.