ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் முதலாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் முதலாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : செப் 04, 2026 07:41 PM
புதுச்சேரி: ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் முதலாண்டு இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்களை வரவேற்கும் வகையில் ‘பிரவேசா 2026’ நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரியின் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். பெங்களூரு, சொனாட்டா மென்பொருள் நிறுவனத்தின் தேர்வு துறைத் தலைவர் விஜயன் பங்கேற்று, மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
பொறியியல் படிப்பின் அடிப்படை கருத்துகளை நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க வேண்டும். தங்களுக்கு மிகவும் விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து, விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் நேர்மறையான எண்ணத்துடன் தங்களது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.
கல்லுாரியின் செயலாளர் சிவராம் ஆல்வா வாழ்த்தி பேசினார். கல்லுாரி ஆலோசகர் ராமச்சந்திரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரியின் டீன் கனிமொழி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில், கல்லுாரியின் பொருளாளர் விமல், அறங்காவலர்கள் முகமது இலியாஸ், சிந்து, தமீம் அன்சாரி மற்றும் முகமது சுைஹல் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மின் மற்றும் மின்னணுப் பொறியியல் துறை உதவி பேராசிரியர்கள் சக்திமுருகன், சுகன்யா ஆகியோர் செய்திருந்தனர்.
