ADDED : மே 25, 2026 07:50 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வில்லியனுார் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்ட வெல்டர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்காஞ்சி மூன்றாவது வீதியைச் சேர்ந்தவர் முகமது நபி, 47; வெல்டர். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் அதற்காக அவ்வப்போது சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை மொட்டை மாடியில் பந்தகால் அமைக்கும் இரும்பு வளையத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
