தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வெல்டிங் தொழிலாளி தற்கொலை

வெல்டிங் தொழிலாளி தற்கொலை

வெல்டிங் தொழிலாளி தற்கொலை


ADDED : மே 21, 2026 09:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 09:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த வெல்டிங் தொழிலாளி, எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொண்டமாநத்தம், பெருமாள் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ், 26; வெல்டிங் தொழிலாளி. இவருக்கு, லாவண்யா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தைகள் உள்ளது. விக்னேஷிற்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு, அவரது மனைவி அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

கடந்த 15ம் தேதி இப்பிரச்னை தொடர்பாக கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, மனமுடைந்து வீட்டில் இருந்து வெளியே சென்ற விக்னேஷ், புதுச்சேரி பாரதி பூங்காவிற்கு சென்று, எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டு, இரவு வீட்டிற்கு சென்றார். பின் வீட்டிற்கு சென்ற விக்னேஷ் திடீரென வாந்தி எடுத்ததால், லாவண்யா உறவினர்கள் உதவியுடன் விக்னேைஷ ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து விக்னேஷ் உடல்நிலை மோசமாக உள்ளதால் மேல் சிகிச்சைக்கு செல்லும்படி பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷ், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us